கொரோனா வைரஸ்
கேரளாவில் 2-வது நாளாக 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் 2-வது நாளாக 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 30 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி தளர்வுகள் அளிக்கப்பட்டதால், அங்கு தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. 4 தினங்களுக்கு முன் 13 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்பு, பின்னர் 20 ஆயிரம், 22 ஆயிரம் என படிப்படியாக அதிகரித்தது. நேற்று முன்தினம் 31 ஆயிரத்தைக் கடந்த நிலையில், நேற்று 30 ஆயிரத்து 7 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 209 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதனிடையே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு கேரள அரசை மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா வலியுறுத்தியுள்ளார். தொற்று பாதித்தோருடன் தொடர்பில் இருப்பவர்களை கண்டறிதல் , தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு குறித்தும் மாநில அரசு பரிசீலிக்கலாம் என்றும் தெரிவித்தார்.