ரெம்டெசிவர் மருந்தின் பயன் என்ன? யாருக்கெல்லாம் கொடுக்கலாம் - ஒரு விரிவான பார்வை!

ரெம்டெசிவர் மருந்தின் பயன் என்ன? யாருக்கெல்லாம் கொடுக்கலாம் - ஒரு விரிவான பார்வை!
ரெம்டெசிவர் மருந்தின் பயன் என்ன? யாருக்கெல்லாம் கொடுக்கலாம் - ஒரு விரிவான பார்வை!

கொரோனா என்ற வைரஸ் பரவிய காலம் முதல் ஒலிக்கும் வார்த்தை ரெம்டெசிவர். கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் ரெம்டெசிவர் மருந்தின் பயன் என்ன? யாருக்கெல்லாம் கொடுக்கலாம்? என்பதை இந்தக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

2019 ஆம் ஆண்டு இறுதியில், சீனாவிலிருந்து பரவத் தொடங்கி, இன்று முழு உலகையுமே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ். 100 ஆண்டுகளில் மனித இனத்தை தாக்கியுள்ள மிக கொடூர வைரஸ் என கணிக்கப்படும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்படுகிறது. 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், 2-வது அலையின் தீவிர தாக்கம், அனைத்து தரப்பு மக்களையும் இந்த மருந்தை நோக்கி திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.

மருந்துக்கு தட்டுப்பாடு 

செயற்கை சுவாசம் தேவைப்படும் நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் கொடுக்கும் போது, இறப்பு விகிதம் பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தியவில் இப்போது இராண்டாம் அலை மிகவும் தீவிரமாக இருப்பதால் ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதில் பல மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக பல தனியார் மருத்துவமனைகளில் இந்தமருந்து கிடைக்கவில்லை நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

அனைத்து நோயாளிகளுக்கும் ரெம்டெசிவர் தேவைப்படுவதில்லை - மருத்துவர்கள்

அதேநேரத்தில் கொரோனா நோயாளிகள் அனைவருக்கும் இந்த மருந்து தேவைப்படுதில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் நெடுநாட்களாக பிரச்னை உள்ளவர்களுக்கும், ஏதேனும் தடுப்பு மருந்து கொடுத்தால் உடனடி எதிர்மறை விளைவு ஏற்படும் நோயாளிகளுக்கும் இந்தமருந்தை கொடுக்கக் கூடாது. ஒரு சில நேரங்களில் மருத்துவர் முடிவு செய்தால் மிகவும் குறைந்த அளவில் 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கும், கர்பிணிகளுக்கும் கொடுக்கலாம்.ரெம்டெசிவர் கொடுக்கனுமா வேண்டாமா என மருத்துவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

குறைக்கப்பட்ட மருந்தின்விலை 

ரெம்டெசிவிர் மருந்தின் விலையை, இந்தியாவில் தயாரிக்கும் நிறுவனங்கள் தற்போது குறைத்துள்ளன. 100 மில்லி லிட்டர் மருந்து 899 ரூபாய் முதல் மூவாயிரத்து 490 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

தேவைக்கேற்ப மருந்து தயாரிப்பு இந்தியாவில் இப்போது இருந்து வந்தாலும் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடிய நபர்களுக்கு மட்டுமே இந்த மருந்து கொடுத்தால் தட்டுப்பாடு என்ற நிலை இருக்காது. அதை அனைவரும் புரிந்து கொண்டு தேவைக்கு ஏற்ப மருந்தை பயன்படுத்தினால் பல உயிர்களை காப்பாற்ற உதவும்.

- செய்தியாளர்கள் சுபாஷ் பிரபு மற்றும் சுகன்யா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com