கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தற்கொலை

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தற்கொலை

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தற்கொலை
Published on

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போரூரை சேர்ந்த சம்பத் என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தான் சிகிச்சை பெற்று வந்த 7-வது மாடியில் புடவையால் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருக்கு ஏற்கெனவே பெருங்குடல் புற்றுநோய் இருந்த நிலையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மன அழுத்தம் காரணமாக சம்பத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com