காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று

காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று

காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று
Published on
காஞ்சிபுரத்தில் இன்று ஒரே நாளில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த 31 நபர்கள் உட்பட 43 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
 
காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர் பகுதியைச் சேர்ந்த கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்யும் 7 நபர்களுக்கும் கொரோனா வைரஸ் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 142 ஆக இருந்தது.
 
இந்நிலையில் இன்று ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு எண்ணிக்கை 43 ஆக உயர்ந்து உள்ளது. அதில் 31 நபர்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்தவர்கள் ஆவர். இதை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் இவர்களுடன் சேர்த்து மொத்தம் 85 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க நபர் மட்டும் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த காஞ்சிபுரத்தைச் சார்ந்த 19 நபர்களும் வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த 1 நபரும் உத்திரமேரூரில் 2 நபர்களும் ஸ்ரீபெரும்புதூரில் 6 நபர்களும் குன்றத்தூரில் 15 நபர்களும் இதில் அடங்குவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com