கோவாக்சின் தடுப்பூசி டெல்டா ப்ளஸ் கொரோனாவுக்கு எதிராக செயல்படுகிறது: ஐ.சி.எம்.ஆர் ஆய்வு

கோவாக்சின் தடுப்பூசி டெல்டா ப்ளஸ் கொரோனாவுக்கு எதிராக செயல்படுகிறது: ஐ.சி.எம்.ஆர் ஆய்வு
கோவாக்சின் தடுப்பூசி டெல்டா ப்ளஸ் கொரோனாவுக்கு எதிராக செயல்படுகிறது: ஐ.சி.எம்.ஆர் ஆய்வு

டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுகிறது என ஐ.சி.எம்.ஆர் ஆய்வில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கோவாக்சின் தடுப்பூசி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி. இதை பாரத் பயோடெக் என்ற நிறுவனமும், ஐ.சி.எம்.ஆர்.ம் இணைந்து தயாரிக்கிறது. இதேபோல டெல்டா ப்ளஸ் திரிபும், முதன்முதலில் இந்தியாவில்தான் கண்டறியப்பட்டது.

தற்போதைக்கு கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய அரசு தன் மக்களுக்கு செலுத்திக்கொண்டிருக்கும் மூன்று தடுப்பூசிகளில் ஒன்றுதான், இந்த கோவாக்சின்.

அனைத்துவகை கொரோனா திரிபுக்கும் எதிராக கோவாக்சின் எந்தளவுக்கு வீரியமாக செயல்படும் என்று, அதை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனமே செய்த ஆய்வில், ‘அறிகுறிகளுடன் கூடிய கொரோனா பாதிப்பின் தீவிரத்தை 77.8% தடுக்கிறது’ என்றும், அதிலும் டெல்டா வகை திரிபென்றால் 65.2% தடுக்கிறது என்றும் கடந்த ஜூலை மாதம் கூறப்பட்டது.

டெல்டா ப்ளஸூக்கு எதிராக செயல்படும் என்றபோதிலும், கோவாக்சின் இதுவரை உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து அவசர கால அனுமதியை பெறவில்லை. அந்த அனுமதிக்காக விண்ணப்பித்திருக்கும் பாரத் பயோடெக் நிறுவனம், அனுமதிக்காக காத்திருக்கிறது. அது கிடைக்கும்பட்சத்தில், விரைவில் கோவாக்சின் வெளிநாட்டு உற்பத்திகள் அதிகமாகலாம் என கணிக்கப்படுகிறது. இந்த அனுமதி கிடைக்காமல் இருப்பதால் தற்போதைக்கு 15 - 16 நாடுகளில்தான் இந்த கோவாக்சின் தடுப்பூசி போடப்படுகிறது. 50 நாடுகளில் பரிசீலனையிலேயே இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com