\
கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்!!

கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்!!

கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்!!
Published on

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்ததுள்ளது.

ஹைதராபாத் காந்தி மருத்துவமனையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி, இரட்டை பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இவர் தெலங்கானாவைச் சேர்ந்தவர் ஆவார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8 கர்ப்பிணிகள் ஏற்கெனவே காந்தி மருத்துவமனையில் குழந்தை பெற்ற நிலையில் இவர் 9வது பெண் ஆவார். தாயும், குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒரு குழந்தை 2 கிலோ மற்றொரு குழந்தை 2.5 கிலோவும் எடை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் முடிவுகள் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்தி மருத்துவமனையில் மே 8 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவருக்கு முதன்முதலாகக் குழந்தை பிறந்தது. அதற்குப் பின் 8 பேருக்குப் பிரசவம் நடந்துள்ளது. பிறந்த குழந்தைகள் வீட்டிற்கு அனுப்பப்பட்டாலும், அடிக்கடி கொரோனா பரிசோதனை செய்யப்படும் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com