கொரோனா வைரஸ்
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று - மருத்துவமனையில் சிகிச்சை
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று - மருத்துவமனையில் சிகிச்சை
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மற்றும் அவருடைய மனைவி மோகனா வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை கிரிம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு லேசான கொரோனா தொற்று இருப்பதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும் சில நாட்களில் வீடு திரும்புவார்கள் என தெரிவித்தனர். தொற்று காரணமாக மருத்துவமனையில் இருப்பதால் சில நாட்கள் கி.வீரமணி பங்கேற்க இருந்த நிகழ்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக திக நிர்வாகிகள் தெரிவித்தனர்.