தஞ்சை மாவட்டத்தில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா
தஞ்சை மாவட்டத்தில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கும்பகோணம் சரஸ்வதி பாடசாலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏற்கெனவே ஒரு ஆசிரியர் மற்றும் 6 மாணவிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்தது. எனவே, பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு அங்கு பயிலும் ஆயிரத்து 200 மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படது. இதில், 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, தஞ்சை மாவட்டத்தில் கடந்த  8ஆம் தேதி அம்மாபேட்டை அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்தப் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்படது. அதில், 66 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து நடத்தப்பட்ட தொடர் சோதனையில், தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் 11 பள்ளிகளைச் சேர்ந்த 143 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இதில், 66 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் குணம்பெற்று வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 168ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தொற்று பரவ காரணமாக இருந்தாக தஞ்சை மற்றும் கும்பகோணத்தில் உள்ள இரு பள்ளிகளுக்கு தலா 5 ஆயிரம் மற்றும் 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com