'' கொரோனாவுக்கு அக்டோபரில் தடுப்பூசியா..? கற்பனையில்தான் சாத்தியம்'' - தொற்றுநோய் நிபுணர்

'' கொரோனாவுக்கு அக்டோபரில் தடுப்பூசியா..? கற்பனையில்தான் சாத்தியம்'' - தொற்றுநோய் நிபுணர்
'' கொரோனாவுக்கு அக்டோபரில் தடுப்பூசியா..? கற்பனையில்தான் சாத்தியம்'' - தொற்றுநோய் நிபுணர்

அக்டோபர் மாத இறுதிக்குள் கொரோனாவுக்கான தடுப்பூசி தயாராக சாத்தியமில்லை என்று அமெரிக்காவைச் சேர்ந்த தொற்றுநோய் நிபுணர் அந்தோணி ஃபாசி தெரிவித்துள்ளார்.

சி.என்.என்-க்கு அளித்த நேர்காணலில் எப்போது கொரோனாவுக்கான தடுப்பூசி தயாராகும் என அமெரிக்க தொற்றுநோய் நிபுணரான ஃபாசியிடம் கேட்கையில், ’’நவம்பர், டிசம்பர் மாதத்திற்குள் கொரோனாவிற்காக மருந்து தயாராகிவிடும் என மக்கள் நினைக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

மருத்துவ மாதிரி பரிசோதனைகளை செய்வது, தடுப்பூசி உருவாக்குபவர்களுக்கு விரைவில் ஒரு தீர்மானத்தை எடுக்கத் தூண்டும். ஆனால் அக்டோபர் மாத இறுதிக்குள் தடுப்பூசியை பெறமுடியும் என்பது கற்பனையில்தான் சாத்தியம்.  உண்மையில் சாத்தியமில்லை’’ என்று ஃபாசி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com