தமிழ்நாட்டில் மாவட்டங்கள் தோறும் மளமளவென உயரும் கொரோனா: பாதிப்பு முழு விவரம்

தமிழ்நாட்டில் மாவட்டங்கள் தோறும் மளமளவென உயரும் கொரோனா: பாதிப்பு முழு விவரம்
தமிழ்நாட்டில் மாவட்டங்கள் தோறும் மளமளவென உயரும் கொரோனா: பாதிப்பு முழு விவரம்

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10,978-ல் இருந்து 12,895 ஆக உயர்ந்துள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 12,843 வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 12 பேர் என 12,895 பேருக்கு தொற்கு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் மேலும் 6,186 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 5,098 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு 6,186 ஆக உயர்ந்துள்ளது. 

தொற்றுடன் தமிழகத்திலுள்ளோர் எண்ணிக்கை 40,000 லிருந்து 51,000 ஆக உயர்வு. இவர்களில் 5800 மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மீதமுள்ள 45,000 பேர் வீட்டுத்தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

கொரோனாவால் மேலும் 12 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,855 ஆக உயர்ந்துள்ளது. இதில், அரசு மருத்துவமனைகளில் 8 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 51,355 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 1,808 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 27,12,096 பேர் டிஸ்சாhஜ் ஆகியுள்ளனர்.

செங்கல்பட்டில் 1,332 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,512 ஆக அதிகரித்துள்ளது.திருவள்ளூரில் 591 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 702 உயர்ந்துள்ளது.

கோவையில் 608 ஆகவும், காஞ்சிபுரத்தில் 343 ஆகவும், மதுரையில் 348 ஆகவும், வேலூரில் 295 ஆகவும், திருச்சியில் 275 ஆகவும், திருப்பூரில் 219 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதுவரை 185 பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தாலும் அனைவருமே குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். ஓமைக்ரான் உறுதியானவர்களில் ஒருவர் கூட சிகிச்சையில் இல்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com