“மீண்டும் ஊரடங்கு என்ற வதந்திகளை நம்ப வேண்டாம்” - ராதாகிருஷ்ணன்

“மீண்டும் ஊரடங்கு என்ற வதந்திகளை நம்ப வேண்டாம்” - ராதாகிருஷ்ணன்
“மீண்டும் ஊரடங்கு என்ற வதந்திகளை நம்ப வேண்டாம்” - ராதாகிருஷ்ணன்

அரசியல் கூட்டங்களில் யாரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிப்பதில்லை என சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும். அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு வரும்போது மக்கள் மாஸ்க் அணிவதில்லை. பொதுசுகாதார வழிமுறை அனைவருக்கும் பொருந்தும். கொரோனாவுக்கு பாகுபாடு தெரியாது. மதம், குடும்பம், அரசியல் சார்ந்த கூட்டங்களில் மாஸ்க் அணியாவிட்டால் கொரோனா கண்டிப்பாக பரவும்.

16 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். முடிந்தவரை 45 லிருந்து 59 வயது வரை இருக்கும் அனைவரும் அரசு இலவசமாக வழங்கும்தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா அறிகுறி இருப்பவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு பரப்பிவிடக்கூடாது. நோய் உறுதியானால் மருத்துவமனைக்கு செல்லுங்கள்.

தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக உயரக்கூடும். அனைத்து விதமான கூட்டங்களும் நடத்தலாம். ஆனால் கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் நடத்த வேண்டும். மீண்டும் ஊரடங்கு என்பது குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். 19 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com