சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடக்கம்

சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடக்கம்

சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடக்கம்
Published on

6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்குகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல், மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. டெல்லி, அரியானா, உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் தொற்று ஏறுமுகம் கண்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.



சிறுவர்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்த வேண்டும் எனக் கூறிய பிரதமர் மோடி , நாடு முழுவதும் 6 வயதில் இருந்து 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இன்று முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என அறிவித்தார். ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து வழங்குகிறது.

இதையும் படிக்க:அதிகரித்த ஹெச்.ஐ.வி தொற்று... ஊரடங்கு காரணமா? 



logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com