\
புதுச்சேரியில் கொரோனா நோயாளிகளை தரையில் அமர வைத்து சிகிச்சை

புதுச்சேரியில் கொரோனா நோயாளிகளை தரையில் அமர வைத்து சிகிச்சை

புதுச்சேரியில் கொரோனா நோயாளிகளை தரையில் அமர வைத்து சிகிச்சை
Published on

புதுச்சேரி கோவிட் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரையில் அமர வைத்து சிகிச்சை அளிக்கப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

புதுச்சேரியில் கொரோனாவால் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவரும் கதிர்காமம் பகுதியில் உள்ள இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் இல்லாமல் தரையில் அமர வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. புதுச்சேரியில் போதிய படுக்கை வசதிகள் உள்ளதாக அரசு தெரிவித்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com