திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனாத் தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை சென்னை காங்கிரஸ் நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைமை பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து அவர் திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து பேசினார். அப்போது ஸ்டாலினுடன் திமுக முக்கிய நிர்வாகிகள் இருந்தனர். இதனிடையே குண்டு ராவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு இருந்த நிலையில், ஸ்டாலினுக்கும், திமுக நிர்வாகிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த முடிவில் ஸ்டாலினுக்கு கொரோனாத் தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது.