தமிழகத்தில் 4ஆவது நாளாக 2,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 4ஆவது நாளாக 2,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 4ஆவது நாளாக 2,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு
Published on

தமிழகத்தில் தொடர்ந்து 4ஆவது நாளாக கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

மேலும் 2 ஆயிரத்து 342 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கையில், 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை மேலும் 874 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், கொரோனா சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 846ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவல் மேலும் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இறந்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 242 பேருக்கும், கோவையில் 207 பேருக்கும் தஞ்சையில் 114 பேருக்கும், திருவள்ளூரில் 80 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com