\
காரைக்கால் அதிமுக வேட்பாளர் அசனாவுக்கு கொரோனா தொற்று

காரைக்கால் அதிமுக வேட்பாளர் அசனாவுக்கு கொரோனா தொற்று

காரைக்கால் அதிமுக வேட்பாளர் அசனாவுக்கு கொரோனா தொற்று
Published on

புதுச்சேரி, காரைக்கால் அதிமுக வேட்பாளர் அசனாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்ய பிரதமர் மோடி நாளை புதுச்சேரிக்கு வரவுள்ளார். கடலூர் சாலையில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள பரப்புரை கூட்டத்தில் பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளின் 30 வேட்பாளர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்யவுள்ளார். இதற்காக பிரதமர் மோடியுடன் மேடையில் பங்கேற்க இருப்பவர், மோடியை வரவேற்க இருப்பவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என பாதுகாப்புத்துறை அறிவுறுத்தினர். இதனைத்தொடர்ந்து அனைத்து வேட்பாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்தபோது, காரைக்கால் தெற்கு தொகுதி எம்எல்ஏவும், அத்தொகுதி வேட்பாளருமான அசனாவுக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com