கொரோனா வைரஸ்
தமிழகத்தில் ஒரேநாளில் 1,669 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் ஒரேநாளில் 1,669 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் 4 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி 17 பேர் உயிரிழந்துள்ளனர், இதுவரை பலியானோரின் மொத்த எண்ணிக்கை 35,288 ஆக உயர்ந்திருக்கிறது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,669 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 26,42,030 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 16,843 ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று 1,565 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 25,89,899 ஆக அதிகரித்திருக்கிறது.