கொரோனா தொற்று: எல்.கே.சுதீஷ் சென்னை கிண்டி கிங் இன்ஸ்ட்டிடியூட்க்கு மாற்றம்

கொரோனா தொற்று: எல்.கே.சுதீஷ் சென்னை கிண்டி கிங் இன்ஸ்ட்டிடியூட்க்கு மாற்றம்
கொரோனா தொற்று: எல்.கே.சுதீஷ் சென்னை கிண்டி கிங் இன்ஸ்ட்டிடியூட்க்கு மாற்றம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்ட்டிடியூட்-க்கு மாற்றப்பட்டுள்ளார்.

பேரவைத் தேர்தலையொட்டி பரப்புரையில் ஈடுபட்டிருந்த எல்.கே. சுதீஷ்-க்கு, கடந்த 19 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. சென்னை - நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இன்று எல்.கே.சுதீஷ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஸ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. திங்கள்கிழமையிலிருந்து பரப்புரைக்கு செல்லவும் அட்டவணை போடப்பட்டு பயணத்திட்டமும் தயாராகியிருந்தது. ஆனால், சுதீஷ்-க்கு கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி, சென்னை - கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் எல்கே சுதீஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com