\
தமிழகத்தில் 10 ஆயிரத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு - என்.சங்கரய்யாவுக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் 10 ஆயிரத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு - என்.சங்கரய்யாவுக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் 10 ஆயிரத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு - என்.சங்கரய்யாவுக்கு தொற்று உறுதி
Published on: 

தமிழகத்தில் கொரோனா தொற்று 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 10.978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நேற்று 8,981 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று 10,978 பேருக்கு தொற்றும் 74 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 4,531 பேருக்கு உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் என் சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர், நலமாக இருப்பதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com