தமிழகத்தில் ஒரேநாளில் 1,531 பேருக்கு கொரோனா – 23 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் ஒரேநாளில் 1,531 பேருக்கு கொரோனா – 23 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் ஒரேநாளில் 1,531 பேருக்கு கொரோனா – 23 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1,578 ஆக இருந்த நிலையில், இன்றைய தினசரி பாதிப்பு 1,531 ஆக குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 1,50,410 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் பாதிப்பு 1531ஆக பதிவாகியுள்ளது, சென்னையில் 184 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 35,650 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகத்தில் 16,972 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,582 பேர் குணமடைந்த நிலையில், மாநிலத்தில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,15,873 ஆக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com