\
உலகளவில் புதிதாக 3,88,178 பேருக்கு கொரோனா பாதிப்பு

உலகளவில் புதிதாக 3,88,178 பேருக்கு கொரோனா பாதிப்பு

உலகளவில் புதிதாக 3,88,178 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

உலகளவில் இதுவரை 22.97 கோடி பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக ஒரே நாளில் 3,88,178 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் ஒரேநாளில் 5,560 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை உலகளவில் மொத்தமாக 47.11 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஒரேநாளில் கொரோனா தொற்றிலிருந்து 4,85,620 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக 20.64 கோடி பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது உலகம் முழுவதும் 18,637,273 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் புதிதாக 74,199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 618 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் இதுவரை 4.30 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 6,93,390 பேர் கொரொனாவால் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலில் புதிதாக 7,884 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 248 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் இதுவரை 2.12 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 5,91,034 பேர் கொரொனாவால் உயிரிழந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com