தமிழகத்தில் இரண்டாவது நாளாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 27 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இரண்டாவது நாளாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 27 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இரண்டாவது நாளாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 27 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,682-ல் இருந்து 1,745ஆக அதிகரித்துள்ளது என மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், 2வது நாளாக மீண்டும் அதிகரித்துள்ளது. 1,60,057 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் ஒருநாள் பாதிப்பு 1,754ஆக உள்ளது. சென்னையில் ஏற்கெனவே 194 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 222 பேருக்கு கொரேனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனாவால் மேலும் 27 பேர் உயிரிழந்த நிலையில், அதன் எண்ணிக்கை 35,427ஆக உயர்ந்துள்ளது. இதில், அரசு மருத்துவமனையில் 19 பேரும், தனியார் மருத்துவமனையில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இணைநோய் இல்லாத ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 17,121ஆக உள்ள நிலையில், கொரோனாவில் இருந்து மேலும் 1,624 பேர் குணமடைந்து இதுவரை 25,99,567 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

இந்நிலையில் 12 வயதிற்குட்பட்ட 81 சிறுவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் எண்ணிக்கை நேற்று 90 ஆக இருந்த நிலையில், இன்று 81 ஆக குறைந்துள்ளது. அதேபோல் கோவையில் 235 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 226 ஆகவும், ஈரோட்டில் 116 ஆகவும் குறைந்துள்ளது.

ஆனால், தஞ்சையில் 60 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 89 ஆக உயர்ந்துள்ளது. சேலத்தில் 88 பேரும், திருப்பூரில் 82 பேரும், திருச்சி மற்றும் திருவள்ளூரில் 81 பேரும், நாமக்கல்லில் 52 பேரும் திருவாரூரிpல் 47 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com