இந்தியாவில் மீண்டும் 40,000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் மீண்டும் 40,000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் மீண்டும் 40,000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு
Published on

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,625 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் ஒரே நாளில் 42,625 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 36,668 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போதைய சூழலில் 4,10,353 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி உயிரிழப்பும் 562 ஆக உயர்ந்துள்ளது.

எனவே மொத்த உயிரிழப்பு 4,25,757 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 97.37 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.34 ஆகவும் உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com