தமிழகத்தில் 'ஞாயிறு முழு முடக்கம்': காவல்துறை கண்காணிப்பு தீவிரம்

தமிழகத்தில் 'ஞாயிறு முழு முடக்கம்': காவல்துறை கண்காணிப்பு தீவிரம்
தமிழகத்தில் 'ஞாயிறு முழு முடக்கம்': காவல்துறை கண்காணிப்பு தீவிரம்

இன்றைய தினம் தமிழ்நாட்டில் ஞாயிறு முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவைகளான மருந்தகங்கள், பால் விநியோகம், சரக்கு போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பான வாகனங்கள் மட்டுமே இயங்குகின்றன.

முழு முடக்கத்தையொட்டி, சென்னையில் சுமார் 500 இடங்களில் காவல்துறையினர் வாகனச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் 16,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். முன்களப் பணியாளர்களுக்கான பேருந்துகளும் தமிழ்நாட்டில் இயக்கப்படுகின்றன. சென்னை மட்டுமன்றி மதுரை, திருச்சி, கோவை, விழுப்புரம், காஞ்சிபுரம், ஈரோடு, ராமநாதபுரம், மயிலாடுதுறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சியில் ஏற்கெனவே 8 சோதனைச்சாவடிகள் உள்ள நிலையில், கூடுதலாக 23 தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கு தற்போதைக்கு 3, 800 காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதேபோல கோவையில், 11 எல்லைப்புறச் சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு்ள்ளனர். மாநிலம் முழுவதும் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி, வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையின்றி சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சுற்றி வருவோரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்புகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com