அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி

அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி
அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி

அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தயாரித்திருக்கும் தடுப்பூசியை, இந்தியாவில் விநியோகிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்திருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது.

அவசர கால பயன்பாட்டின்கீழ், இத்தடுப்பூசி இந்தியாவில் விநியோகிக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. அனுமதியை தொடர்ந்து, பொதுபயன்பாட்டுக்கு அதை அனுமதிக்கும் முன், முதற்கட்டமாக 100 பேருக்கு செலுத்தப்பட்டு, செயல்திறன் கண்காணிக்கப்படும்.

இந்த தடுப்பூசியை இந்தியாவில் மும்பையை சேர்ந்த சிப்லா நிறுவனம் இறக்குமதி செய்து, நாடு முழுவதும் விற்பனை செய்யும். சிப்லா சார்பில், மேற்கூறிய ‘பயன்பாட்டுக்கு முன் 100 பேருக்கு செலுத்தப்பட்டு, அதன் முடிவுகளை சமர்ப்பிப்பது’ குறித்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு உறுதியளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போதைக்கு மாடர்னா தடுப்பூசி, அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியங்களில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில், ஏற்கனவே கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் நான்காவதாக மாடர்னாவுக்கு அனுமதி கிடைத்துள்ளது. பிறநாடுகளில் இதுவரை இத்தடுப்பூசியை செலுத்திக்கொண்ட மக்களுக்கு 90 சதவிகிதம், அறிகுறிகளுடன் ஏற்படும் கொரோனா பாதிப்பு தவிர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com