\
சிறார் கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவுகள் விரைவில் தொடக்கம்

சிறார் கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவுகள் விரைவில் தொடக்கம்

சிறார் கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவுகள் விரைவில் தொடக்கம்
Published on: 

ஜனவரி 1 முதல் சிறார் தடுப்பூசிக்கான முன்பதிவுகள் தொடங்கவுள்ளன.

இந்தியாவில் 15 - 18 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதற்கான முன்பதிவுகள் யாவும், ஜனவரி 1 முதல் கோவின் தளத்தில் தொடங்குவதாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.

முன்பதிவுக்கு ஆதார் கட்டாயமில்லை என்றும், ஆதார் அட்டை இல்லாத சிறார்களுக்கு 10ஆம் வகுப்பு அடையாள அட்டையை காட்டி தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம் எனக்கூறப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com