\
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா நெகட்டிவ்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா நெகட்டிவ்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா நெகட்டிவ்
Published on

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


தமிழகத்தில் 8-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கும், உயர்க் கல்வித்துறை அமைச்சர் கேபி. அன்பழகன்,  மின்சாரத்துறை அமைச்சர் தங்க மணி உள்ளிட்டோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று முதலமைச்சர் பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனையானது நடத்தப்பட்டது. இதில் முதல்வருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது..  மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட  ஒரு தினத்திற்கு முன்பு அவர் முதல்வரை சந்தித்ததாகவும், அதனால் தான் முதலமைச்சருக்கும் உடனடியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com