\
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கொரோனா தொற்று உறுதி!

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கொரோனா தொற்று உறுதி!

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கொரோனா தொற்று உறுதி!
Published on

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஏபி சாஹிக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அனைவரையும் பாகுபாடின்றி பாதித்துவருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.பி. சாஹிக்கு இருமல் மற்றும் உடல் சோர்வு இருந்ததால், அவருக்கு கொரோனா சோதனைச் செய்யப்பட்டது. தற்போது வெளிவந்த சோதனை முடிவுல் அவருக்கு கொரோனா அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் கொரோனா சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com