கொரோனா வைரஸ்
“கொரோனா தடுப்பூசியால் நரம்பியல் பாதிப்பு” -5 கோடி ரூபாய் இழப்பீடு கோரும் தன்னார்வலர்
“கொரோனா தடுப்பூசியால் நரம்பியல் பாதிப்பு” -5 கோடி ரூபாய் இழப்பீடு கோரும் தன்னார்வலர்
ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியை பரிசோதனை செய்த சென்னை தன்னார்வலருக்கு நரம்பியல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக 5 கோடி இழப்பீடுகோரி அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அக்டோபர் 1 ஆம் தேதி ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசி பரிசோதனைக்கு பின்னர், தனக்கு கடுமையான நரம்பியல் மற்றும் உளவியல் நோய் அறிகுறிகள் ஏற்பட்டதாக 40 வயதான சென்னை நபர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். தனது சட்ட அறிவிப்பில், அவர் 5 கோடி இழப்பீடு மற்றும் தடுப்பூசி சோதனை மற்றும் உற்பத்தியை நிறுத்திவைக்க கோரியுள்ளார். இவரின் குற்றச்சாட்டு தொடர்பாக டி.சி.ஜி.ஐ மற்றும் நிறுவன நெறிமுறைகள் குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளன.