கொரோனா வைரஸ்
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மேலும் இரு காவலர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மேலும் இரு காவலர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ஓய்வுபெற்ற டிஜிபியின் கார் ஓட்டுநர், நீதிபதி பாதுகாப்பு பிரிவு உதவி ஆய்வாளர் ஆகியோர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.
சென்னையை அடுத்துள்ள புழலை சேர்ந்தவர் கமலநாதன் (33). ஆயுதப்படை காவலராக இருந்த இவர், கடந்த மாதம் 25ஆம் தேதி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இதேபோல எஸ்பி. சிஐடி பாதுகாப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிவந்த ஆவடியைச் சேர்ந்த சின்னக்கண்ணு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கொரோனா இரண்டாம் அலையில் காவலர்கள் பலரும் தொற்றால் பாதிக்கப்படுவதும் அதில் சிலர் உயிரிழப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.