ஆக்சிஜன் படுக்கைகள் 1,300 - கொரோனா சிகிச்சை மருத்துவமனையாகும் ஸ்டான்லி மருத்துவமனை

ஆக்சிஜன் படுக்கைகள் 1,300 - கொரோனா சிகிச்சை மருத்துவமனையாகும் ஸ்டான்லி மருத்துவமனை

ஆக்சிஜன் படுக்கைகள் 1,300 - கொரோனா சிகிச்சை மருத்துவமனையாகும் ஸ்டான்லி மருத்துவமனை
Published on

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை முற்றிலும் கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில்தான் அதிக பாதிப்பு பதிவாகி வருகிறது. ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை முற்றிலும் கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்பட்டிருக்கிறது.

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே கொரோனா நோயாளிகளுக்காக 2 கட்டடங்களில் 1200 படுக்கைகள் உள்ளன. இதில் 800 படுக்கைகள் ஆக்சிஜன் படுக்கைகள். தற்போது உயர் சிறப்பு சிகிச்சை கட்டடத்திலும் 3 தளங்களில் 750 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக தயார் செய்யப்பட்டுள்ளன. இதில் 500 படுக்கைள் ஆக்சிஜன் படுக்கைகளாக உருவாக்கப்பட்டு வருகின்றன.

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இனி கொரோனா மொத்த படுக்கைகளின் எண்ணிக்கை 1950 ஆக அதிகரிக்கும். அதிலும் ஆக்சிஜன் வசதி உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்துள்ளது. இது தவிர இதயம், நுரையீரல், சிறுநீரகவியல், கல்லீரல் உள்ளிட்ட அனைத்து நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் என அனைவரும் கொரோனா பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா முதல் அலையின்போது 320 மருத்துவர்கள் பணியில் இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. செவிலியர்கள் எண்ணிக்கை 500-இல் இருந்து 672 ஆகவும் பணியாளர்கள் எண்ணிக்கை 600-இல் இருந்து 720 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், ஸ்டான்லி மருத்துவமனை முற்றிலும் கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்படுவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதோடு உயிரிழப்புகளை பெருமளவில் குறைக்க முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

- சுகன்யா‌‌‌‌‌‌‌‌‌

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com