\
சென்னை: சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனாவால் உயிரிழப்பு
Published on

சென்னையில் கொரோனா பாதிப்பிற்கு சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்துள்ளார். கொரோனாவுக்கு சென்னை காவல் துறையில் இரண்டாவதாக உயிரிழந்தவர் இவர் ஆவார்.

சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் மணிமாறன்(57). இவருக்கு கடந்த 11ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. அறிகுறிகள் இருந்ததால் சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் உயிரிழந்தார்.

ஏற்கெனவே சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய பாலமுரளி கொரோனா காரணமாக இறந்த நிலையில் சென்னை காவல் துறையில் இரண்டாவது இறப்பு சம்பவம் நடந்துள்ளது. சென்னை காவல்துறையில் இதுவரை 1155 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 462 போலீசார் பூரண குணமடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com