கொரோனா பாதித்தவர்களுக்காக வாட்ஸ் அப் குரூப் - ராயப்பேட்டை காவல்துறை அசத்தல்..!

கொரோனா பாதித்தவர்களுக்காக வாட்ஸ் அப் குரூப் - ராயப்பேட்டை காவல்துறை அசத்தல்..!
கொரோனா பாதித்தவர்களுக்காக வாட்ஸ் அப் குரூப் - ராயப்பேட்டை காவல்துறை அசத்தல்..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களுக்காக சென்னை ராயப்பேட்டை உதவி கமிஷனர் வாட்ஸ் அப் குரூப் ஒன்றினை உருவாக்கியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேலாக நாள்தோறும் 1500 பேருக்கு மேல் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட உடன் தொற்று உடையவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவார்கள்.

கொரோனா தொற்றுடையவர்கள் மருத்துவமனை மற்றும் தடுப்பு முகாம்களில் 14 நாட்கள் இருப்பார்கள். இதில், நோயின் தாக்கம் அதிக அளவில் உள்ளவர்கள் விதிவிலக்கு. எப்படி இருந்தாலும், மருத்துவமனை மற்றும் தடுப்பு முகாம்களிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்படுவார்கள். இந்தத் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் காலம் தான் மிகவும் முக்கியமானவை. வெளியுலக தொடர்புகள் இல்லாமல் வீடுகளிலேயே கட்டுப்பாட்டுடன் இருப்பது உண்மையில் மிகவும் சிரமமான விஷயம்.

இந்நிலையில், ராயப்பேட்டையில் உள்ள கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அப்பகுதி உதவி கமிஷனர் எம்.எஸ்.பாஸ்கர் வாட்ஸ் அப் குரூப் ஒன்றினை உருவாக்கியுள்ளார். என்ன கொரோனா தொற்று உடையவர்களுக்கு வாட்ஸ் அப் குழுவா?. கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா. ஆம், கொரோனா நோய்த் தொற்றுடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் காலத்தில் மன ரீதியாகப் பாதிப்பு அடையக் கூடாது என்ற நோக்கத்தில் இந்த வாட்ஸ் அப் குழுவை உருவாக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

“தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் காலத்தில் உடல் ரீதியாக வெளி உலக தொடர்புகள் இல்லாமல் இருக்க வேண்டியிருக்கும். கொரோனா தொற்று உடையவர்களுடன் தொடர்பில் இருப்பதற்காகவும், அவர்களுக்காக நாங்கள் இணைந்து செயல்படுகிறோம் என்பதைத் தெரிவிக்கவும் இத்தகைய ஏற்பாடு செய்துள்ளோம்”என்று கூறுகிறார் உதவி ஆணையர் பாஸ்கர். இந்தக் குழுவில் மூத்த காவல்துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர். ராயப்பேட்டை மற்றும் ஐஸ் அவுஸ் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்டுள்ள 133 பேர் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் கொரோனா நோய்த் தொற்று தொடர்பான உண்மைகளை இந்தக் குழுவில் பகிர்ந்து வருகின்றனர். கொரோனா தொற்றுடையவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு உடனுக்குடன் வாட்ஸ் அப் குழுவில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com