80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி - சென்னை மாநகராட்சி

80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி - சென்னை மாநகராட்சி

80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி - சென்னை மாநகராட்சி
Published on

சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 044- 2538 4520 உள்பட இரு தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்யலாம். அதன்பேரில் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 25 லட்சத்து 14 ஆயிரத்து 228 பேருக்கு முதல் தவணையும், 10 லட்சத்து 54 ஆயிரத்து 704 பேருக்கு இரண்டாம் தவனை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com