மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி

மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி

மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி
Published on

கோர்பிவேக்ஸ், கோவோவேக்ஸ் ஆகிய 2 தடுப்பூசிகள் மற்றும் மால்நுபிரவிர் என்ற மருந்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது .

ஹைதராபாத்தை சேர்ந்த பயோலாஜிக்கல்-இ நிறுவனம் தயாரித்துள்ள கோர்பிவேக்ஸ் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புரத அடிப்படையிலான தடுப்பூசியாகும். நானோ துகள் தடுப்பூசியான கோவோவேக்ஸ் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே மால்நுபிரவிர் மாத்திரை பயன்தரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கோவாக்சின் , கோவிஷீல்டு, ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளது .

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com