கொரோனா தடுப்பூசி சோதனையில் தன்னார்வலர் உயிரிழப்பு? தொடரும் பரிசோதனை.!

கொரோனா தடுப்பூசி சோதனையில் தன்னார்வலர் உயிரிழப்பு? தொடரும் பரிசோதனை.!
கொரோனா தடுப்பூசி சோதனையில் தன்னார்வலர் உயிரிழப்பு? தொடரும் பரிசோதனை.!

பிரேசிலில் கொரோனாவுக்கான தடுப்பூசியை சோதனை முறையில் போட்டுக்கொண்ட நபர் உயிரிழந்துள்ளார். அதேவேளையில் அவர் இறப்புக்கான சரியான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கான தடுப்பூசியை பல நாடுகள் மும்முரமாக கண்டுபிடித்து வருகின்றன. சில தடுப்பூசிகள் சோதனை
முறையில் உள்ளன. அதற்கான சோதனையில் தன்னார்வலர்கள் பலர் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள்
தன்னார்வலகர்களின் உடல்களில் செலுத்தப்பட்டு அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள். அதன் ரிசல்டை பொருத்து அடுத்தக்கட்ட நகர்வு
இருக்கும்.

இந்நிலையில் பிரேசிலில் கொரோனாவுக்கான தடுப்பூசியை சோதனை முறையில் போட்டுக்கொண்ட நபர் உயிரிழந்துள்ளார்.
அதேவேளையில் அவர் இறப்புக்கான சரியான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராசெனிகா ஆகியவை இணைந்து இந்த தடுப்பூசியை தயாரித்து வருகின்றன. ஆனாலும் இந்த தடுப்பூசி சோதனை தற்போதும் வழக்கம்போல் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன.

தன்னார்வலர் எந்த அளவிலான தடுப்பூசி சோதனையை எடுத்துக்கொண்டார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை மருத்துவ நிறுவனம் வெளியிடவில்லை. இது குறித்து தெரிவித்துள்ள ஆக்ஸ்போர்ட், மருத்துவ பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து எந்த கவலையும் இல்லை.

கொரோனா பரிசோதனை வழக்கம்போல் தொடரும் என தெரிவித்துள்ளது. அதேவேளையில் பிரேசில் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், தன்னார்வலர் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ளவில்லை எனவும், அதற்கு முன்னர்தான மருத்துவசோதனையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com