\
பாஜக-வின் கே.டி ராகவனுக்கு கொரோனா உறுதி!

பாஜக-வின் கே.டி ராகவனுக்கு கொரோனா உறுதி!

பாஜக-வின் கே.டி ராகவனுக்கு கொரோனா உறுதி!
Published on: 

அரசியல் தலைவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி குணமடைந்து வருகின்றனர். பா.ஜ.கவைச் சேர்ந்த மூத்த தலைவர்களான இல. கணேசன், சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தற்போது குணமாகி உள்ள நிலையில், தமிழக பா.ஜ.கவின் பொதுச் செயலாளர் கே.டி ராகவனுக்கு கொரோனா தொற்று இன்று உறுதியாகி உள்ளது.

கடந்த சில வாரங்களாக கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விவாதங்களில் பங்கேற்று வந்தார் ராகவன். தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அவர் பொறுப்பாளராக உள்ள வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கட்சி செயல்பாடுகளை கவனித்து வந்தார்.

கடந்தவாரம் லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். சோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, தற்போது சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com