பீகார்,  கர்நாடக முதல்வர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி

பீகார், கர்நாடக முதல்வர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி

பீகார், கர்நாடக முதல்வர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி
Published on

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு இன்று கொரோனா உறுதியாகியிருந்த நிலையில், தற்போது பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

பீகார் மாநில அரசு சமூக வலைதளங்களில் தெரிவித்திருக்கும் தகவலில், “முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மக்கள் அனைவரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்” எனக் கூறப்பட்டுள்ளது.

இதேபோல கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கும் தகவலில், “நான் லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளேன். என்னுடைய உடல்நலன் சீராக உள்ளது. இப்போது நான் வீட்டுத்தனிமையில் உள்ளேன். கடந்த தினங்களில் என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொரோனா உறுதிசெய்யபப்ட்ட அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொள்வதாகவே அறிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com