சர்வதேச பயணிகளுக்கு சாதகமாக அமையுமா ஆஸ்திரேலிய அரசின் கோவிஷீல்டு தடுப்பூசி அனுமதி?

சர்வதேச பயணிகளுக்கு சாதகமாக அமையுமா ஆஸ்திரேலிய அரசின் கோவிஷீல்டு தடுப்பூசி அனுமதி?
சர்வதேச பயணிகளுக்கு சாதகமாக அமையுமா ஆஸ்திரேலிய அரசின் கோவிஷீல்டு தடுப்பூசி அனுமதி?

ஆஸ்திரேலியாவில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஃபைசர், அஸ்ட்ராஜெனிகா, மாடர்னா மற்றும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளுக்கு ஆஸ்திரேலியா முன்னரே அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

ஆஸ்திரேலிய பிரதமர் அலுவலகத்திலிருந்து நேற்றைய தினம் இதுபற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. கடந்த வாரம் நடந்த வாஷிங்டன் குவாட் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி இதுபற்றி ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மேரிசனிடம் விவாதித்திருந்து குறிப்பிடத்தக்கது. கோவிஷீல்டு மட்டுமன்றி சீனாவால் தயாரிக்கப்பட்ட சினோவாக் தடுப்பூசிக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியானது, இந்தியாவின் சீரம் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படுவதாகும்.

இந்த ஒப்புதலின்மூலம் வெளிநாடுகளிலிருந்து கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி நாட்டுக்குள் வருபவர்களுக்கும் இனி அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது. இருப்பினும் பயணிகளுக்கான அந்த வழிமுறை என்றிலிருந்து வழக்கத்துக்கு வருகிறதென சொல்லப்படவில்லை. விரைவில் அந்த விவரங்கள் தெரியவந்தாலே, அத்தேதி குறித்தும் தெரியவரும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com