பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூருக்கு கொரோனா உறுதி

பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூருக்கு கொரோனா உறுதி
பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூருக்கு கொரோனா உறுதி

பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ளச் செய்தியில் “ நான் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டதை கூற வேண்டியது எனது கடமையாக கருதுகிறேன். எனக்கு கொரோனா தொற்று சம்பந்தமான  எந்த அறிகுறியும் இல்லை. அதனால் மருத்துவர்களின் அறிவுரைப்படி நான் என்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். எனக்கும் உதவிகரமாக இருக்கும் உங்களுக்கு தொடர்ந்து எனது உடல்நலம் குறித்த தகவல்களை தருகிறேன். அசாதாரண ,எதிர்பாராத இந்தத் தருணங்களை மனித குலம் நிச்சயம் வெல்லும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பாலிவுட் நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆகியோர் கொரோனாவிலிருந்து மீண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com