"வைரஸை விரட்ட பயனுள்ள தடுப்பூசி தேவை"-உலக சுகாதார நிறுவனம்

"வைரஸை விரட்ட பயனுள்ள தடுப்பூசி தேவை"-உலக சுகாதார நிறுவனம்

"வைரஸை விரட்ட பயனுள்ள தடுப்பூசி தேவை"-உலக சுகாதார நிறுவனம்
Published on

கொரோனா வைரஸை விரட்ட உடம்பில் எதிர்ப்பு சக்தியை உருவாக்க பயனுள்ள தடுப்பூசி தேவை என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து இதுவரை 1 கோடியே 50 லட்சத்து 37 ஆயிரத்து 670 பேர் குணமடைந்துள்ளனர்.  2 கோடியே 22 லட்சத்து 94 ஆயிரத்து 602 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 7 லட்சத்து 83 ஆயிரத்து 429 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 64 லட்சத்து 73 ஆயிரத்து 503 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 935 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால பிரிவின் இயக்குனர் டாக்டர் மைக்கேல் ரேயான் கூறுகையில், “நாம் மந்தை எதிர்ப்பு சக்தியை (பெரும்பாலானோர் எதிர்ப்புச்சக்தி பெறுவது) அடைவதற்கான நம்பிக்கையுடன் வாழக்கூடாது" என்றார்.

மேலும் " உலகளவிய மக்கள் தொகையில், இந்த கொரோனா தொற்று நோயை தடுக்க தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியை பெறும் அளவுக்கு நாம் நெருங்கக்கூட இல்லை. இது தீர்வு ஆகாது. நாங்கள் இதை தீர்வாக பார்க்கவும் இல்லை. பெரும்பாலானோர் எதிர்ப்புச்சக்தியை பெறுவதற்கு பயனுள்ள தடுப்பூசி தேவை, அது 50 சதவீத மக்களையாவது சென்று அடைவதை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com