மதுரை ’டூ’ கோவை கொரோனா விழிப்புணர்வு பாதயாத்திரை மேற்கொள்ளும் வயதான தம்பதி..!.

மதுரை ’டூ’ கோவை கொரோனா விழிப்புணர்வு பாதயாத்திரை மேற்கொள்ளும் வயதான தம்பதி..!.
மதுரை ’டூ’ கோவை கொரோனா விழிப்புணர்வு பாதயாத்திரை மேற்கொள்ளும் வயதான தம்பதி..!.

மதுரை டூ கோயம்புத்தூர் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பாதயாத்திரை மேற்கொள்ளும் வயதான தம்பதிகளின் செயல் அனைத்து தரப்பினரின் பாராட்டுதலை பெற்றுள்ளது.

மதுரையை சேர்ந்த வயதான தம்பதிகள் கருப்பையா - சித்ரா. இவர்கள் மதுரையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சமூகப்பணியை செய்துவரும் நிலையில், காந்திய வழியில் செயல்படும் தம்பதிகளாகவும் திகழ்ந்து வருகின்றனர்.

சமூகம் சார்ந்த பல நல்ல காரியங்களுக்காக தொடர்ச்சியாக பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே இவர்கள் தமிழகத்திலிருந்து இமயமலை மற்றும் வாகா எல்லை வரையும் பாதயாத்திரை செய்துள்ளனர். மேலும் 30 ஆண்டுகளாக இது போன்று பல்வேறு காலகட்டங்களில் பாதயாத்திரை செய்துள்ளதாகவும், தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரத்தை தமிழக மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக பாதயாத்திரை செல்வதாக கூறுகின்றனர்.

மதுரையிலிருந்து தொடங்கும் கொரோனா விழிப்புணர்வு பாதயாத்திரை திருச்சி, சேலம், விழுப்புரம் வழியாக கோயம்புத்தூர் சென்று நிறைவடையும் என்று கூறுகின்றனர். 650 கிலோமீட்டர் தூரம் கொண்டு இந்த பாதயாத்திரை 33 நாட்களில் முடியும் என்றனர். மேலும் சைக்கிள் ஒன்றையும் தனது பாதயாத்திரையில் பயன்படுத்துவதோடு, அதில் அவர்களுக்குத் தேவையான உடைகள், உணவு சமைப்பதற்கான பாத்திரங்கள், காற்றடிக்கும் பம்ப் என தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு செல்கின்றனர்.

மேலும் சைக்கிளில் கொரோனா விழிப்புணர்வு பாதயாத்திரை தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்துள்ளதோடு, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களையும் மக்களிடையே கொடுக்கின்றனர். அதேபோல தாங்கள் செல்லும் மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

தங்களின் இந்த செயலுக்கு அனைத்து தரப்பு மக்களும் அமோக வரவேற்பு அளிப்பதாக கூறுகிறார்கள். மேலும் நாங்கள் பாதுகாப்பாய் இருப்பதோடு, பிறரையும் பாதுகாப்போடு இருக்கச் சொல்லவே இந்த பாதயாத்திரையை மேற்கொள்கிறோம் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com