\
ஒமைக்ரான் பரவல் - எய்ம்ஸ் இயக்குநர் அறிவுறுத்தல்

ஒமைக்ரான் பரவல் - எய்ம்ஸ் இயக்குநர் அறிவுறுத்தல்

ஒமைக்ரான் பரவல் - எய்ம்ஸ் இயக்குநர் அறிவுறுத்தல்
Published on: 

ஒமைக்ரான் கொரோனாவால் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்கவேண்டும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், உலக நாடுகளில் ஒமைக்ரான் வேகமாக பரவி வருவதாகவும் குறிப்பாக பிரிட்டனில் மோசமான நிலை ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஒமைக்ரான் பரவலால் ஏற்படும் எத்தகைய பாதிப்பையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்கவேண்டியது அவசியம் என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 150க்கும் அதிகமானோருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மோசமான சூழல் ஏற்படாமல் இருக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com