அன்பான மதுரை மக்களே.... நடிகை சினேகா வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ

அன்பான மதுரை மக்களே.... நடிகை சினேகா வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ
அன்பான மதுரை மக்களே.... நடிகை சினேகா வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ

மதுரை மாநகராட்சி சார்பில் சனிக்கிழமை நடைபெறும் தடுப்பூசி முகாம்களில், மதுரை மக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென நடிகை சினேகா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் ஆறாவது முறையாக மெகா தடுப்பூசி முகாம் வரும் சனிக்கிழமை 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சிறப்பு தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்த வேண்டுமென தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில்  நடிகை சினேகா மதுரை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “அன்பான மதுரை மக்களே, மதுரை மாநகராட்சி சார்பில் வரும் சனிக்கிழமை உயிரை காக்கும் கொரானா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த தடுப்பூசி முகாமில் அனைவரும் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்றார் அவர். இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஏற்கெனவே தடுப்பூசி முகாம் குறித்து நடிகை சினேகாவின் கணவர் பிரசன்னா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

அன்பான மதுரை மக்களே.... நடிகை சினேகாவின் விழிப்புணர்வு வீடியோ...#vaccination #vaccinationcamp #Covid19 #Sneha @Prasanna_actor pic.twitter.com/AC3jHNEVXP
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) October 21, 2021

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com