கொரோனா வைரஸ்
“எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி”- கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்தார் ராமராஜன்
“எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி”- கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்தார் ராமராஜன்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனரும் நடிகருமான ராமராஜன் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் குணமடைந்து வீடு திரும்பினார். மருத்துவ பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் சிகிச்சை அளித்ததாக கூறியுள்ள அவர், உயர் தர சிகிச்சை வழங்கிய தமிழக அரசுக்கும், தனக்காக பிரர்த்தனை செய்து, நலம் விசாரித்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சக நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள், நண்பர்கள் மற்றும் ரசிக பெருமக்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.