“அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்”- கொரோனாவிலிருந்து மீண்டபின் கமல்ஹாசன் நெகிழ்ச்சி
நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளார்.
அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் தொற்று பாதிப்பு இருப்பது தனக்கு உறுதி செய்யப்பட்டதாக கம்ஹாசன் தனது சமூகவலைதள பக்கத்தில் கடந்த 22-ஆம் தேதி பதிவிட்டிருந்தார். மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்தி: ”கமல்ஹாசன் உடல்நிலை சீராக உள்ளது” - மருத்துவமனை அறிக்கை
இந்நிலையில் இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார் அவர். இதுகுறித்து சமூகவலைதளத்தில் அவரே பதிவிட்டும் உள்ளார். தனது அப்பதிவில் அவர், “முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும். தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
“அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்” என்ற தலைப்பில், கமல் தரப்பிலிருந்து அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் “மருத்துவமனை வாசம் முடித்து இன்று பணிக்குத் திரும்பினேன். நலமாக இருக்கிறேன். என்னுடைய விடுப்பை திறம்பட சமாளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கும் விக்ரம் படக்குழுவினருக்கும் என் நன்றிகள்.
<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும். தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன். <a href="https://t.co/IScdLsBjOL">pic.twitter.com/IScdLsBjOL</a></p>— Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://twitter.com/ikamalhaasan/status/1466997345275445249?ref_src=twsrc%5Etfw">December 4, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
நான் விரைந்து குணமடைய வேண்டுமென ஆலயங்களில், தேவாலயங்களில், மசூதிகளில் பூஜைகள், பிரார்த்தனைகள், தொழுகைகள் நடத்தியும், நேர்த்திக்கடன்கள் செய்தும், அன்னதானம், ரத்ததானம் உள்ளிட்ட நற்பணிகளிலும் ஈடுபட்ட என்னுடைய ரசிகர்கள், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள், என்னை தன் வீட்டில் ஒருவனாகக் கருதி எனக்காக கண்கலங்கி தங்கள் பிரார்த்தனையில் எனக்காகவும் வேண்டிக்கொண்ட லட்சக்கணக்கான தமிழக மக்களுக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.
பிரார்த்தனைகளுக்குப் பலன் உண்டா என்று எனக்குத் தெரியாது. ஆனால் உங்கள் அன்பின் வலிமையை அறிந்தவன் நான். உங்கள் தூய பேரன்பல்லவா என்னைக் கொரோனாவிலிருந்து கரை சேர்த்திருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்.