\
”எனக்கு கொரோனா உறுதியாகியுள்ளது”- நடிகர் அர்ஜூன்

”எனக்கு கொரோனா உறுதியாகியுள்ளது”- நடிகர் அர்ஜூன்

”எனக்கு கொரோனா உறுதியாகியுள்ளது”- நடிகர் அர்ஜூன்
Published on

நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது அப்பதிவில், “எனக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதனால் மேற்கொண்டு பாதிப்பை தவிர்க்க, என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். முறையான தடுப்பு நடவடிக்கைகளையும் செய்துக்கொண்டு இருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன்.

தற்போதைக்கு நான் நலமாக இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். எப்போதும் உங்கள் மாஸ்க்கை நீக்கிவிட வேண்டாம்” என தெரிவித்துள்ளார். சமீபத்தில் தான் அர்ஜூன் சர்வைவர் நிகழ்ச்சியை முடித்து வீடுதிரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com