\
இந்தியா: ஒரேநாளில் 41,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியா: ஒரேநாளில் 41,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியா: ஒரேநாளில் 41,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் தினசரி பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை தொடா்ந்து சரிந்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 41,506 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 8 லட்சத்து 36 ஆயிரத்து 872 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 41,526 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 99 லட்சத்து 75 ஆயிரத்து 64 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் தற்போது நாடு முழுவதும் 4,54,118 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 895 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 08 ஆயிரத்து 040 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 37,60,32,586 ஆக அதிகரித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com