\
மாநிலங்களுக்கு இதுவரை 149 கோடி கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் - மத்திய அரசு

மாநிலங்களுக்கு இதுவரை 149 கோடி கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் - மத்திய அரசு

மாநிலங்களுக்கு இதுவரை 149 கோடி கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் - மத்திய அரசு
Published on: 
மத்திய அரசின் தொகுப்பில் இருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 149 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து 75 சதவிகித தடுப்பூசிகளை மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில், இதுவரை 149 கோடியே 6 லட்சத்து 76 ஆயிரத்து 985 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது 16 கோடியே 80 லட்சத்து 89 ஆயிரத்து 481 டோஸ் தடுப்பூசிகள் மாநிலங்கள் வசம் உள்ளன.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com