‘ஏ’ வகை ரத்தத்தை கொரோனா எளிதில் தாக்குமா?: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கொரோனா வைரஸ் இந்த ரத்த வகை கொண்டவர்களை எளிதில் தாக்கும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் கொரோனா தாக்கியவர்களை வைத்து வுகானில் இருக்கும் ஷோங்னான் மருத்துவமனை நிர்வாகம் முக்கியமான ஆராய்ச்சியைச் செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 2500 பேரைக் கொண்டு மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். அவர்களின் உணவுப் பழக்கம், பணிகள், அன்றாட செயல்கள், ரத்த மாதிரி, முந்தைய நோய் தாக்குதல் என்று பல விஷயங்களை எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்துள்ளனர். இதில் ஒரு புதிய தகவலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி கொரோனா பாதித்த 2500 பேரில் 65 சதவீதம் பேர் ‘ஏ’ ரத்த வகையைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது ‘ஏ’ பாசிட்டிவ், ‘ஏ’ நெகட்டிவ், ‘ஏபி’ பாசிட்டிவ், ‘ஏபி’ நெகட்டிவ் ஆகிய ரத்த மாதிரிகளைக் கொண்டவர்களைத்தான் இந்த வைரஸ் எளிதாகத் தாக்கி உள்ளது. இன்னொரு பக்கம் ‘ஓ’ பாசிட்டிவ், ‘ஓபி’ பாசிட்டிவ், ஓபி நெகட்டிவ் மற்றும் ‘ஓ’ நெகட்டிவ் வகை ரத்தம் கொண்டவர்களுக்குக் குறைவாகத் தாக்கியுள்ளது.
‘ஓ’ வகை ரத்தம் கொண்டவர்களை இந்த வைரஸ் தாக்காது என்றெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் சொல்லவில்லை. அவர்களுக்கு தாக்குதல் குறைவாக ஏற்படுகிறது என்பதனை குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ‘ஏ’ வகை ரத்தம் கொண்டவர்கள் மிக எளிதாக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இவர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரத்த வகைகள் மக்கள் தொகையில் வேறுபடுகின்றன. அமெரிக்காவில் , மக்கள் தொகையில் சுமார் 44 சதவீதம் பேர் ‘ஓ’ வகை, சுமார் 41 சதவீதம் பேர் ‘ஏ’ வகை ரத்த வகையைக் கொண்டவர்கள். சுமார் 1.1 கோடி மக்கள் தொகை கொண்ட வுகானில்,‘ஓ’ வகை 32 சதவீதமும், ‘ஏ’ வகை 34 சதவீதமும் ஆகும். ஆரோக்கியமான மக்கள் மத்தியில், கோரோனா நோயாளிகளில், இது சுமார் 38 மற்றும் 25 சதவீதமாக இருந்தது.
முந்தைய ஆய்வுகளின்படி, நோர்வாக் வைரஸ், ஹெபடைடிஸ் பி மற்றும் கடுமையான சுவாச நோய்(சார்ஸ்) உள்ளிட்ட பிற தொற்று நோய்களில் இரத்த வகை வேறுபாடு காணப்படுகிறது. புதிய ஆய்வின் முடிவுகள் மருத்துவ நிபுணர்களுக்கு உதவக்கூடும், ஆனால் சாதாரண குடிமக்கள் புள்ளிவிவரங்களை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நீங்கள் ’ஏ’ வகை என்றால், பீதி அடையத் தேவையில்லை. நீங்கள் 100 சதவீதம் பாதிக்கப்படுவீர்கள் என்று அர்த்தமல்ல எனக் குறிப்பிட்டுள்ளனர்.
நீங்கள் ’ஓ’ வகை என்றால், நீங்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல. நீங்கள் இன்னும் கைகளைக் கழுவ வேண்டும் மற்றும் அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.